கிழக்கில்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகனாலயத்தின் வருடாந்த
மகோற்சவத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
நாளை (22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம் பெறவிருப்பதாக ஆலய பரிபாலன சபை செயலாளர் எஸ்.பரா( அதிபர்) தெரிவித்தார்.
மட்டு.அம்பாறை மாநிலத்தில் மூன்று மலைக்கோவில்கள் உள்ளன. தாந்தாமலை, சங்குமண்கண்டிமலை உகந்தைமலை என்பனவாகும்.
இவை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டனவாகும்.
கடந்த சில தினங்களாக அங்கு ஆயிரக்கணக்கான அடியார்கள் சென்று வழிபட்டனர்.
மலையில் ஏறி விநாயகனையும் மலையடி வாரத்தில் ஆறுமுகனையும் வழிபட்டு வருகின்றனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பூஜையில் மிகவும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பலர் நேர்த்திகளில் ஈடுபட்டனர்.
நீண்ட கடைத்தெரு காணப்படுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. போக்குவரத்துசேவையும் சீராக இடம்பெறுகிறது.
நாளை மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சேருவரென எதிர்பார்க்கப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours