(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சின் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையம் ஏற்பாடு செய்து நடாத்திய வருடாந்த பாராட்டு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு (21) சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளருமான ஏ. பீர்முகமது, சட்டமுதுமாணி, சட்டத்தரணி சஹ்பி எச். இஸ்மாயில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மாவட்ட உத்தியோகத்தர் ரீ. எம். ரின்சான், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். ரம்ஸான், கிராம நிர்வாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபீகா, ஏ.எம். தௌபீக், அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி ஐ.எல். ரிஸ்வான், பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சீ.முஹம்மத், பிரதேச செயலக நிதி உதவியாளர் ஏ.சீ.றியாஸ், கலாசார மத்திய நிலைய நிறைவேற்றுக்குழு குழு உறுப்பினர்களான ஓய்வுபெற்ற கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரப், ஆசிரியர் எம்.ஐ. எம். அமீர், மூத்த கலைஞர் எம். ஐ. அலாவுதீன் மற்றும் மத்திய நிலையத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ஊடகவியலாளரும் பல்துறைக் கலைஞருமான எம்.எஸ்.எம்.ஸாகிர், மத்திய நிலைய அபிவிருத்தி சங்க செயலாளர் அஸ்வான் மௌலானா, பொருளாளர் ஏ.பி. நௌசாத் உட்பட கலைஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மத்திய நிலைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் ஹஸீதா மற்றும் சிறுமிகளின் பரத நாட்டியம் உட்பட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் மேடையில் அரங்கேற்றப்பட்டதோடு, கடந்த வருடம் கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்ட பாடநெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, பாராட்டு கௌரவம், நினைவுச் சின்னம் வழங்கும் வைபவங்களும் இடம்பெற்றன.
இதன் போது சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்வில், முக்கிய அம்சமாக சாய்ந்தமருதில் பிரதேச செயலாளராக இருந்து ஊரின் நலன் கருதி, தன்னலம் பாராது சேவையாற்றி அரும் பணியாற்றிவரும் சேவைச் செம்மல் பிரதேச செயலாளர் எம். எம். ஆசிக், மத்திய நிலையப் பொறுப்பதிகாரி யூ.கே. எம். றிம்ஸானினால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் இறக்காமம் பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஏ.பி. நௌசாத் மற்றும் மத்திய நிலையத்தின் செயலாளராக இருதடவைகள் கடமையாற்றிய கலைஞர் அஸ்வான் மௌலானா ஆகியோர் நினைவுச் சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours