(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஹர்ரம் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு கொழும்பு கிருலப்பன ஜும்ஆப்  பள்ளிவாசலில் (08) இடம்பெற்றது 

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் கொழும்பு இஹ்ஸானிய்யா மதரஸாவின்  அதிபர் அஷ்ஷேக்  பாரூத் இஸ்லாமியப் புதுவருட முஹர்ரம் சிறப்புகள் குறித்து  தமிழ் மொழியிலும்
கொம்பெனித் தெரு அஹதிய்யாப் பாடசாலை மாணவன் ஸமீம் நசார் சிங்கள மொழியிலும் உரையாற்றினர்.

கொம்பெனித் தெரு அஹதிய்யாப் பாடசாலையின் கஸீதா குழுவினர்களால் கஸீதா பாடப்பட்டது.

கிருலப்பன ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் ஸப்ரி ஜூனுஸினால் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எச்.எம்.ஏ.எம்.ஹேரத்
கிருலப்பன ஜும்ஆப் பள்ளிவாசலின் பிரதித் தலைவர் இம்தியாஸ் முஸ்தபாவினால் நினைவுச் சின்னம் வழங்கியும் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான்  பள்ளிவாசலின் தனதிகாரி ஸகீர் மர்ஸூக்கினால் 
நினைவுச் சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர். 

 கிருலப்பன ஜும்ஆப் பள்ளிவாசலின் செயலாளர் அல்ஹாஜ் சப்ரி யூனுஸினால் நிகழ்வில் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் அல் ஹாஜ் ஏ.எச்.எம்.பௌஸி, திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான எம்.எஸ். அலா அஹமட், என்.நிலூபர், இலங்கை வக்ப் சபையின் உறுப்பினர்கள், ஹஜ் குழுவின் உறுப்பினர்களான இஷாக் ஹனிபா, இஃபாஸ் நபுகான் , கொழும்பு முன்னாள் பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால், திணைக்கள நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அஷ்ஷேக் முப்தி முர்சி உட்பட உலமாக்கள், மற்றும்  திணைக்களத்தின் அதிகாரிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், ஊர் ஜமாஅத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours