விளையாட்டின் ஊடாக உடல் உள ஆரோக்கியத்தோடு சிறந்த ஆளுமை மிக்க மனிதர்களையும் உருவாக்க முடியும் அத்தோடு ஒரு மனிதனது செயற்பாடுகளும் மனநிலைகளும் திடமான முடிவுகளும் சிறப்பாக அமையுமானால்; அவர் சிறந்த ஆளுமைமிக்க ஒருவர் என்பதனை அறிந்துகொள்ளமுடியும் என கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார்
துறைநீலாவணை லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 24 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் கிறிக்கட் மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை 14 ஆம் திகதி கழகத் தலைவர் அ.துசாந் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இப்போட்டியானது கடந்த இரு வாரங்களாக நடைபெற்றதுடன் அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 32 கழகங்கள் பங்குபற்றி இருந்ததுடன் இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று ஜங் புளோவர் விளையாட்டுக் கழகத்திற்கும் களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் நடைபெற்றதில் களுதாவளை கெனடி விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டு வெற்றிக்கிண்ணத்தினை சுபீகரித்துக்கொண்டது.
சிறப்பதிதிகளாக ஊடகவியலாளர் சா.நடனசபேசன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் த.வினாயகமூர்த்தி, வடிவேல் மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
அவர் மேலும் பேசுகையில் விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் துறைநீலாவணை மைதானத்தில் உங்களது திறமைகளை காட்டியிருந்தீர்கள் உங்களைப் பாராட்டுவதுடன் எதிர்காலத்தில் குன்றின் ஒளியாக சர்வதேசம் வரைக்கும் உங்களது திறமை மேலோங்கி சாதனை படைக்கவேண்டும் அதேவேளை லயன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் 24 வருடத்தினைக் கடந்துவருவது சாதரண விடயமல்ல அவர்கள் அனைவரும் இளம் வீரர்கள் பல்வேறுபட்ட தடைகளைத் தாண்டி பல சாதனைகளை மண்ணுக்குச் சேர்த்துவருகின்றமைக்குப் பாராட்டுவதுடன் இக்கழகத்திற்கு என்னாலான உதவிகளை முன்னின்று செய்துகொடுக்கவுள்ளேன் என்றார்
Post A Comment:
0 comments so far,add yours