சா.நடனசபேசன்
மாகாண மட்ட பெரு விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட றாணமடு இந்து கல்லூரி மாணவிகள் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கபடி போட்டியில் இரண்டாவது இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளதாக அதிபர் க.கதிரைநாதன் தெரிவித்தார்.இப்போட்டியானது 17 ஆம் திகதி புதன்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதில் இச்சாதனையினை நிலைநாட்டியுள்ளனர்
இதேவேளை இம்மாணவர்களின் வெற்றிக்கு உழைத்த பாடசாலையின் பயிற்றுவிப்பாளர் நிரோஜன் ,ஆசிரியர்கள்;, பழையமாணவர்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய வலயக்கல்வி அலுவலகத்தினர் அனைவருக்கும் அதிபர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
அதே வேளை வெற்றிபெற்ற மாணவிகளுக்கு அப்பிரதேச பொது அமைப்புக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதுடன் வழிப்படுத்திய அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours