சின்ன விசாரை இடைக் கண்ட குழுவின் தலைவர் அல்ஹாஜ் அப்துல் மஜீத் ஜே.பி. தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஆர். வேல்கஜன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சம்மாந்துறை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஆர். வேல் கஜனுக்கு சின்ன விசாரை இடைக் கண்ட குழு தலைவர் அப்துல் மஜீத் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந் நிகழ்வில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் முகம்மது பைசல், சின்ன விசாரை இடைக் கண்ட நிர்வாக சபையின் கணக்குப் பரிசோதகர் பொறியியலாளர் என்.எம். நழீம், சின்ன விசாரை இடைக் கண்ட நிர்வாக சபையின் செயலாளர் அப்துல் வகீல், பொருளாளர் எம்.எச்.எம். அர்சாத், வட்டவிதானை எம்.ஏ. அமீர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், விவசாயிகள், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours