எழுத்து,
இலக்கியம் மற்றும் அரசியற் செயற்பாடுகளால் சமூக முன்னோடியாகத் திகழ்ந்தவர்
சட்டத்தரணி எஸ்.முத்துமீரான் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்
பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
முத்துமீரான் இறையடி சேர்ந்ததையிட்டு, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சமூகத்தின்
பிரதிபலிப்புக்கள் இவரது இலக்கியத்தின் பேசுபொருளாகின. சிறந்த
சட்டத்தரணியாகப் பணியாற்றி, பல விடயங்களில் தனக்கிருந்த ஆவல்களை
அடையாளப்படுத்தினார். ஆசிரியர் பணியிலும் முத்துமீரானின் ஆளுமைகள்
அலங்காரமாகவே அடையாளமாகிறது.
அரசியல்
ரீதியாக நெருங்கிப் பழகாவிடினும், எமது கட்சியை நெறிப்படுத்துவதில்
கண்ணாகச் செயற்பட்டவர். இவரது மகனின் மனைவியார், மூதூர் பிரதேச சபை
உறுப்பினராகச் செயற்பட்டவர். மகனார் எமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளர்.
விதியின் ஏற்பாடுகள் எல்லோரையும் உலகத்தைவிட்டுப் பிரிக்கவே செய்யும்.
எல்லாம் வல்ல இறைவன் பிரிவுகளைத் தாங்கும் மன பலத்தை எமக்குத் தரட்டும்! தோப்புமீரானுக்கு சொர்க்க வாசல் திறக்கட்டும்.
எல்லாம்
வல்ல அல்லாஹ்! அன்னாரைப் பொருந்திக்கொண்டு, அவருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ்
எனும் உயர் மிகு சுவன பாக்கியத்தை வழங்குவானாக..! ஆமீன்..!
என்றுமுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours