கிழக்குமாகாணத்தில் மூவினமக்களும்  வாழுகின்றனர் இப்பிரதேசத்தில் இனம் மதம் மொழி என்பவற்றிற்கு அப்பால் தனது சேவையினை சிறப்பாக செய்து வருகின்ற ஒருவராக இருந்து கொண்டிருக்கின்றார் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் என்பதனை யாரும் மறந்துவிடமுடியாது. இவ் ஊழியர்களது நிரந்தர நியமனம் தொடர்பாக ஆளுநர் அவர்கள் ஜனாதிபதி அவர்களுக்கு தெரியப்படுத்தி தற்போது அதற்கான தீர்வாகவே உங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் கிடைப்பதனை இட்டு நான் பெருமிதம் அடைகின்றேன் என அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்
கிழக்கு மாகாண அரச சேவையின்
உள்ளூராட்சி மன்றங்களின் அலுவலகப்பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் கிழக்குமாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திணைக்களத்தலைவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக கடமையாற்றி வந்த  1350க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஒரே நாளில்  நிரந்தர நியமனங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
அவர்மேலும் பேசுகையில்
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில்  இருக்கும் போதும் உள் ளூராட்சி மன்றத்தில் தற்காலியமாக கடமையாற்றிய ஊழியர்களுக்கு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் நிரந்தர நியமனத்தை வழங்கியுள்ளமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் இதற்கு அனைத்து ஒழுங்குகளையும் செய்த கிழக்குமாகான ஆளுநர் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்யமுடியாத பல வேலைத்திட்டங்களை  உள் ளூராட்சி மன்றங்களின் ஊடாக பல அபிவிருத்திகளை முன்னெடுக்கமுடியும் என்பதனை நான் பலதடவைகள் பிரதேசசபைத்தலைவராக இருந்தபோது அறிந்திருக்கின்றேன் எனவே உள் ளூராட்சி மன்றத்தலைவர்கள் தங்களது கடமைகளை சிறப்பாகச் செய்யும்போது பிரதேசத்தின் அபிவிருத்தியினை வினைதிறன் மிக்கதாக மாற்றமுடியும் என்றார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours