( வி.ரி. சகாதேவராஜா)

 கதிர்காமத்தில் மாணிக்க கங்கைநதி தீரத்திலே அழகாக நிர்மாணிக்கப்பட்ட தங்க நுழைவாயில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தங்க நுழைவாயில் படிக்கட்டுகளில் கண் கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

வரலாற்றில் முதல் தடவையாக பல லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தங்கநுழைவாயில் ஊடாகச் சென்று நேற்று (22) திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

இதற்காக லட்சோப லட்சம் மக்கள் அங்கு ஒன்றுகூடியிருந்தனர். மக்கள் வெள்ளம் அங்கு அலைமோதுகிறது.

 கதிர்காம தேவாலய  நிலமே திஷான் 
 குணசேகர தலைமையில் இம் முதல் நிகழ்வு நடைபெற்றது.

மிகவும் அழகாக நிரு மாணிக்கப்பட்டுள்ள இந்த நுழைவாயிலூடாக யானைகள் சகிதம் பேழை எடுத்து செல்லப்பட்டு நீர் வெட்டு ( தீர்த்தோற்சவம்) இடம் பெற்றது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours