எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் இலங்கை
இராணுவத்தினரின் மனிதாபிமான செயற்பாடுகளில் ஒன்றான அங்கஅவயங்கள்
இழந்தவர்களுக்கான செயற்கைகால் வழங்கும் நிகழ்வானது கிழக்கு கட்டளைத்
தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்க தலைமையில் வெளிகந்தை கலாசார மத்திய
நிலையத்தில் இன்று (28) இடம் பெற்றது.
கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
ஷெவாந்த் குளதுங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இப்பிரதேசங்களில் கால்களை
இழத்தவர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு
இருந்தது.
இதன் போது கால்களை இழந்த 40 மேற்பட்ட நபர்களுக்கு
கால்களின் அளவுகள் பெறப்பட்டு அவர்களுக்கா செயற்கை அவையங்கள் புதிதாக
நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
தூர பிரதேசங்களில் உள்ளவர்களின்
பாத அளவீடுகள் மேற்கொள்ளவதில் உள்ள சிறமத்தை கருத்திற் கொண்ட மேஜர் ஜெனரல்
அவர்களினால் இப்பிரதேசத்திற்கே நடமாடும் இச்சேவையை வழங்குவதற்குரிய
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அங்கவினர்களுக்கான
புதிய செயற்கை அவயங்களுக்கான அளவீடுகள் பெறப்பட்டு புதிய செயற்கைகால்கள்
வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது.
மேலும் தூர பிரதேசங்களில் உள்ள அங்கிவினர்களுக்கான போக்குவரத்து ஏற்பாட்டை இராணுவத்தினரே மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு
நட்புறவுச் சங்கத்தின் (Colombo friend - in - Need Society ) அனுசரனையில்
ரொட்டரி கொழும்பு கபிட்டல் சிற்றி சிறிலங்கா ( Rotary Capital City Sri
Lanka) நிருவனத்தின் நிதி பங்களிப்பில் பயனாளிகளுக்கான செயற்கை
கால்களை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவாந்த் குளதுங்கவினால் வழங்கி
வைக்கப்பட்டது.
இராணுவத்தினரினால் இன மத பேதமின்றி அவயம்
இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் முன்னால்
போராளிகளுக்கும் செயற்கை கால்களை வழங்கியமை இராணுவத்தின் மனித நேயப் பண்பை
எடுத்துக் காட்டும் செயற்பாடாக உள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours