எஸ்.எம்.எம்.றம்ஸான்)
தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை (11) ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடியில் எம்ஆர்எப் வில்லா மெரின் மண்டபத்தில் நடாத்தியது.
அமைப்பின் தவிசாளர் யூ.எல்.எம்.என். முபீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் முகமாகவும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை முஸ்லிம்களின் கோரிக்கைகளை உள் வாங்குவதை நோக்கமாகக் கொண்டும் மற்றும் முஸ்லிம் அரசியல் பரப்பில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பிரதான ஜனாதிபதி வேட்பாளருடன் ஒப்பந்தங்களை செய்யும்போது முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை பெற்றுக் கொள்வதை அழுத்தம் கொடுக்கும் வகையிலும் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைப்பின் உபதலைவர் எஸ் எம் கே முகம்மத் ஜாபீர் மற்றும் செயலாளர் எம் எம் எம் நளீம் பொருளாளர் எம்ஐ ஆதம் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours