பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட மக்களின் கருத்துக்களை அறியும் நிகழ்வு திங்கட்கிழமை (12) இரவு அட்டாளைச்சேனை சக்கி வரவேற்பு மண்டபத்தில், கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளர் அமீர் மற்றும் அட்டாளைச் சேனை மத்திய குழுத் தலைவர் ஹம்ஷா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுத் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அப்துல் றஷாக் ஜவாத் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களும், கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர்.
இதன்போது, கட்சியின் பிரதி செயலாளரும் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ. அன்சில், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளருமான எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான மாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் போராளிகள், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொத்துவில், அக்கறைபற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, இறக்காமம், வாங்காமம், வரிப்பத்தான்சேனை, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours