நூருல் ஹுதா உமர்
2024 ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவி கே. பாத்திமா நிஸ்கா முதலாம் பிரிவு வாசிப்பு போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இம்மாணவிக்கு பாடசாலை சமூகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இம் மாணவியின் வெற்றிக்காக தொடர் பயிற்சியளித்த பாடசாலையின் தமிழ் பாட ஆசிரியைகளான எம்.ஐ.நஜீமா, கைறுல் குலாசா, வகுப்பாசிரியர் எஸ்.எல்.நவாஹிர் மற்றும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய இணைப்பாட பொறுப்பு அதிபர்எம்.எப்.எம்.ஆர்.ஹாதீம், பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன், பிரதி அதிபர் எம்.எஸ்.எம். சுஜான் ஆகியோர்களுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துள்ளது
இம்மாணவி எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள மாகாண மட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த பாடசாலை 2024 இல் இணைப்பாடவிதான போட்டிகளில் பல வரலாற்று வெற்றிகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Post A Comment:
0 comments so far,add yours