( வி.ரி.சகாதேவராஜா)
தாய்ப்பாலுட்டலின் புதிய அணுமுறைகள் மற்றும் புதிய உத்திகள் பற்றிய கருத்தரங்கொன்று மட்டக்களப்பில் நேற்று நடைபெற்றது.
தாய்ப்பாலுட்டல்
மாதமான ஆகஸ்ட் மாத செயற்பாடுகளில் ஒன்றாக, மட்டக்களப்பு பிராந்திய
வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பணியாற்றும்
பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள்க்கான
விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த இரண்டு நாட்களாக பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் பணிமனையில் அமைந்துள்ள டாக்டர் சதுர்முகம் மகாநாட்டு
மண்டபத்தில் இடம்பெற்றது.
பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதிஇரா.முரளிதரனின்
வழிகாட்டுதலில், தாய் சேய் நலப்பிரிவின் பிராந்திய வைத்தி அதிகாரி டாக்டர்
கே. கிரிசுதன் ஒருங்கிணைத்திருந்த இக் கருத்தரங்கில் மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான மருத்துவ நிபுணர் (Consultant
Neonatologist) வைத்திய கலாநிதி டாக்டர் ஆர். மதன் வளவாளராக கலந்து
கொண்டிருந்தார்.
பாலுட்டலின்
முக்கியத்துவமும் அதனை ஊக்குவிப்பதற்கான அணுமுறைகள் மற்றும் அதற்கான
தற்போதைய காலத்தில் அறிமுகப்படுத்தபட வேண்டிய புதிய உத்திகள் மற்றும்
தகவல்களை தெளிவூட்டும் அடிப்படையில் இக்கருந்தரங்கு இடம் பெற்றிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours