(எம்.எம்.ஜெஸ்மின்)
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட வீட்டு திட்டங்களுக்கு சூரிய மின்கல மின்சார உற்பத்தி மூலம் மின்சார வசதிகளை பெற்றுக் கொடுப்பதன் ஊடாக குறித்த வீடுகளில் வாழும் குடும்பங்களின் மின்சார தேவைகளை இலவசமாகவும் மேலதிகமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை இலங்கை மின்சார சபைக்கும் விற்பனை செய்வதற்குமான நடவடிக்கை குறித்து கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களுடைய தலைமையில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த ஒப்பந்த காலத்துக்கு பிறகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் சூரியமின்கலத் தொகுதிகள் குறித்த பயனாளிகளுக்கு சொந்தமாவதுடன் அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரத்தை இலங்கை மின்சார சபைக்கு நேரடியாகவே விற்பனை செய்வதன் மூலம் மேலதிக வருமானத்தை பெற முடியும் எனவும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர் எம் பி ரத்நாயக,கௌரவ ஆளுநர் அவர்களின் செயலாளர் எம் மதநாயக,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ராஜிவ்சூர்யாராச்சி, உப தவிசாளர் லக்ஷ்மன் குணவர்தன, பொது முகாமையாளர் கே ஏ ஜானக, திருகோணமலை மாவட்ட முகாமையாளர் பொறியாளர் நிமல் போன்ற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours