எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பின்
மண்வாசனை வீசும் திரைப்படமாக உருவாகியுள்ள "போடியார்" எனும்
திரைப்படத்தின் வெளியீட்டு விழாவிற்கான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு கிறின்
கார்டன் மண்டபத்தில் (O1) திகதி இடம்பெற்றது.
எதிர்வரும் 23 திகதி பிற்பகல் 06 மணிக்கு விஜயா திரையரங்கில் முதலாவது காட்சி வெளியிடப்படவுள்ளது.
விசுவல்
ஆர்ட் மூவி நிறுவனத்தின் உரிமையாளர் ப.முரளிதரனின் தலைமையில் இடம்பெற்ற
ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு கலைஞர்கள் தமது திறமைகளை
வெளிப்படுத்துவதற்கான களமாக இத் திரைப்படம் காணப்படுகின்றது.
உயிரோட்டமான
கிராமிய மண்வாசனையை பிரதிபளிக்கும் திரைப்படமாக அமையப்பெற்றுள்ள
இத்திரைப்படத்தில் சமூகத்தினை விழிப்புணர்வூட்டும் கருத்துக்கள்
காணப்படுவதாக இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டது.
கோடீஸ்வரனின்
இயக்கத்திலும், AJ சங்கர்ஜனின் இசையமைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ள
இத்திரைப்படத்தை Visual Art Movies நிறுவனத்தின் சார்பில் வைத்திய நிபுணர்
அருளானந்தம், சதா சண்முகநாதன், ப.முரளிதரன் ஆகியோர் இணைந்து
தயாரித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக ரீதியான சினிமா துறையை மாற்றுவதற்கான மைல்கல்லாக இப்படம் காணப்படுவதாக அவதானிகள் தெரிவித்தனர்.
மீன்
பாடும் ஊரு, கார் கூந்தல், நாடும் நல்லால ஆகிய மூன்று பாடல்கள்
வெளியிடப்பட்டதுடன், 1966 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பின்
பிரபலமான பாடலான மீன்மகள் பாடுகிறாள் எனும் பாடலும் உத்தியோகபூர்வமாக
இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழ்
சினிமாவின் வர்த்தக அந்தஸ்த்தை உயர்த்த வேண்டுமானால் தொடர்ச்சியாக
படங்களைத் தயாரிக்க வேண்டும். அதற்காக Visual Art Movies நிறுவனத்துடன்
இணைந்து எவரும் படம் தயாரிக்க முன்வரலாம் என முரளிதரன் அழைப்பு விடுத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours