(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இலங்கைக்கான துருக்கிய குடியரசின் தூதுவராக புதிதாகக் கடமையேற்ற துருக்கிய தூதுவர் செமி லூத்வூ ரேக்ற் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் மெட்ரோ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கொழும்பிலுள்ள துருக்கிய தூதுவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (22) இடம்பெற்றது. 

ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களாக இடம்பெற்ற 
இந்த நீண்ட கலந்துரையாடலின் போது இலங்கை மக்களின் கல்வி, அரசியல் சமூக, கலாசாரம் போன்ற இன்னோரன்ன விடயங்கள் பலவும் பேசப்பட்டன.

இதன் போது கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இணைப்புச் செயலாளர் ஏ.எல்.எம் இன்சாட் அவர்களும் கலந்து கொண்டார்.

எதிர்காலத்தில் கிழக்கிலங்கை மக்களுக்கு தன்னால் இயன்ற உதவி ஒத்தாசைகளை வழங்குவதாக துருக்கி தூதுவர் இதன்போது உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours