எஸ்.சபேசன்
நவீன கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் முகமாக 1.1 மில்லியன் பெறுமதியான திறன் வகுப்பறை (Smart classroom) திறப்பு விழா கமு/சது/ வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் கே.தியாகராஜா அவர்களின் தலைமையில் (08.08.2024)வியாழக்கிழமை இடம்பெற்றது.
திறன் வகுப்பறைக்கான நிதியுதவி அமரர். கலாநிதி. சுதன் சுதர்சன் நினைவாக சுமதி சுதர்சன்இ ஷோனா சுதர்ஷன்இ நீலன் சுதர்சன்(USA)அவர்களால் மனித நேயம் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் நெறிப்படுத்தலில் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
நிகழ்வில் மனித நேய அமைப்பின் சார்பாக சு. சிரஞ்ஜீவி மற்றும் திருமதி சிரஞ்ஜீவிஇ உதவிக் கல்விப் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சகாதேவராஜாஇ ஆசிரியஆலோசகர்களான ம.சந்திரகுமார்இ சா.மோகன்இ விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பின் தலைவர் தி.கோபிநாத் இணைப்பாளர் பொறியியலாளர் வ.யதுர்ஷன்இ பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கு.மதிவண்ணன்இ பழைய மாணவர் சங்க செயலாளர் சனோஜன்இ பாடசாலையின் உப அதிபர்இமா.தர்மலிங்கம் ஆசிரியர்கள்இ விஞ்ஞான ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்கள்இ பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மனித நேயம் அமைப்பின் இச் சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் சிரஞ்ஜீவி தம்பதியினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post A Comment:
0 comments so far,add yours