எஸ்.சபேசன்
கல்வியில் சாதனைபடைப்பதன் மூலமே எதனையும் சாதிக்கமுடியும் என்பதனை கருத்தில் கொண்டு பின்தங்கிய பிரதேச மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பதற்கு வறுமையும் வளப்பற்றாக்குறையும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ; E-கல்வி திட்டத்தின் மூலம் பல செயற்றிட்டங்களை ஆரப்பித்து இருக்கின்றோம் என நு-கல்வி திட்டத்தின் பிரதித் தலைவர் வைத்தியர் செல்லத்துரை வாசுதன் தெரிவித்தார்
சம்மாந்துறைக் கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நு-கல்வி மூலம் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டத்தினை மேற்பார்வைசெய்வதுடன் அச்செயற்றிட்டத்தின் பயனாக 3 ஏ சித்திபெற்று பல்கழைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவியினையும் பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
பின்தங்கிய பிரதேச மாணவர்களது நலன்சார்ந்து E-கல்வி திட்டத்தின்மூலம் பலதிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதே வேளை இத்திட்டத்தை எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பயனுள்ளதாக முன்னெடுப்பது தொடர்பாக ஆராயப்பட்டது
இந்த நிகழ்விற்கு அவுஸ்ரலியாவில் வசிக்கும் E-கல்வி திட்டத்தின் இணைப்பாளர் அவுஸ்ரலியாவில் வசிக்கும் எஸ்.சாந்தகுமாரன் சட்டத்தரணி திருமதி தர்ஷினி சுந்தரரேசன். வைத்தியர் ரமேஸ். லண்டனில் வசிக்கும் எஸ்தர் யோகநாதன் மற்றும் நாவிதன்வெளிக்கோட்டத்தில் E-கல்வி திட்டத்தின் மூலம் பயன்பெறும் அதிபர்கள் இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்
அவர் மேலும் பேசுகையில் ஆசிரியர்கள் சமூகத்தின் தூண்கள் அவர்களது காத்திரமான செயற்பாடுகள்மூலம் மாணவர் சமூகத்தினைமுன்னேற்றமுடியும் இப்பாடசாலையின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது அதிபர் சிறப்பான திட்டமிடலுடன் ஆசிரியர்களது சீரான செயற்பாடுகள் மூலமும் கிடைக்கும் வளங்களை உச்சநிலைக்குக் கொண்டுவருவதற்குச் செயற்பட்டு வருவது பாராட்டுக்குரியது. இத்திட்டமானது முதல் முதலில் எனது சொந்த ஊhரான துறைநீலாவணையில் ஆராம்பித்தோம் பின்னர் பின்தங்கிய பல பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தியுள்ளோம் நான் துறைநீலாவணையில் கற்று மருத்துவராகத் தெரிவாகி யாழ்பல்கலைக்கழகத்தில் கற்று இன்று அவுஸ்ரேலியாவில் தொழில்புரிகின்றேன் அங்கிருந்துதான் இவ் அமைப்பின் மூலம் பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவிக்கொண்டிருக்கின்றோம் என்றார்
Post A Comment:
0 comments so far,add yours