( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண புத்தாக்கம் மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 
 சம்மாந்துறை வலய பாடசாலைகளின் 5 புத்தாக்கங்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளன.

முதலிடத்தை றாணமடு இந்து கல்லூரி மற்றும் தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தை அல் மர்ஜான் மகளிர் கல்லூரி மற்றும் மல்வத்தை விபுலானந்தா மத்திய கல்லூரி மூன்றாவது இடத்தை அல் அமீர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் பெற்றுக் கொண்டன.

இவர்களுக்கான சான்றிதழ்களை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார் சாதனைக்குரிய மாணவர்கள் கற்பித்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் பயிற்சியளித்த ஆசிரிய ஆலோசகர் ரிஎல்.றைஸ்டீன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முன்னதாக சம்மாந்துறை வலய மட்டத்தில் 2024.09.12ல் நடாத்தப்பட்ட வலய மட்ட புத்தாக்க போட்டியில் பத்து புத்தாக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு மாகாண மட்ட புத்தாக்க போட்டிக்கு அனுப்பி வைக்கப் பட்டது .

இம் மாகாண மட்ட போட்டி கடந்த 2024.09.14 திகதி மட்டக்களப்பு சென் மைக்கேல் கல்லூரியில் நடைபெற்றது..

இதில் இரண்டு முதலிடங்களையும், இரண்டு இரண்டாம் இடங்களையும் ,ஒரு மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை ஐந்து மெரிட் இடங்களையும்  பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் ரிஎல்.றைஸ்டீன் தெரிவித்தார்.

இதற்காக உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு அவர் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார் .







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours