புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நிர்வாகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக விஜித ஹேரத் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் வைத்து நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நவம்பர் அல்லது டிசம்பர் மாத இறுதியில் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய நாடாளுமன்றம் கூடும் வரை புதிய அமைச்சரவை பதவியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours