எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஜனாதிபதி
தேர்தலுக்கான வாக்கொண்னும் பணகளுக்கான மத்திய நிலையமாக செயற்படும்
மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டி விநியோகம் இன்று
காலை 7.00 மணி முதல் இடம்பெற்றது.
நாளைய தினம் இடம் பெற உள்ள
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பட்டிகள் இன்று (20) திகதி மட்டக்களப்பு
இந்து கல்லூரி வளாகத்தில் இருந்து சிரேஷ்ட தலைமை தாங்கும்
உத்தியோகத்தர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
குறித்த வாக்குப்பட்டிகள் உரிய வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பொலிஸ்
பாதுகாப்புடன் சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களால் எடுத்துச்
செல்லப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும்
அரசாங்க அதிபருமாகிய திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் அனைத்து
ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல்
ஆணையாளர் எம்.பீ.எம்.சுபியான் அவர்களின் மேற்பார்வையின் கீழ் வாக்குப்
பெட்டி விநியோகம் இடம் பெற்று வருகின்றது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் இம்முறை 449,686 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளதுடன், கல்குடா தொகுதியில் 134,104 வாக்காளர்களும்,
மட்டக்களப்பு தொகுதியில் 210,293 வாக்காளர்களும்
பட்டிருப்பு தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்கவுள்ளனர்.
81 வலயங்களாக பிரிக்கப்பட்டு
442 வாக்களிப்பு நிலையங்களில் நாளைய தினம் வாக்களிப்பு இடம் பெறவுள்ளது.
கல்குடா தொகுதியில் 123 வாக்களிப்பு நிலையங்களும்
மட்டக்களப்பு தொகுதியில் 197 வாக்களிப்பு நிலையங்களும்
பட்டிருப்புத் தொகுதியில் 122 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் தபால்மூலம் வலுக்களிப்பதற்கு 13,448 பேர்
விண்ணப்பித்திருந்நிலையில் 13,116 பேர் வாக்களிக்கத் தகுதி
பெற்றிருந்ததுடன், 332 பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,
1514 பொலிசார் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் விசேடமாக தேர்தல் கடமைகளுக்காக பணிக்கமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours