(அஸ்ஹர் இப்றாஹிம்)
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களை சுகாதார மேம்பாட்டு வேலைத்தளமாக மாற்றுதல் தொடர்பாக துறைசார்ந்த உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்துறை மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எஸ்.எம்.பௌசாத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ தாதியர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உற்பத்தித் திறன் மேம்பாட்டு அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours