(24) சனாதிபதி அலுவலகத்தில் புதிய பிரதம அமைச்சராக செல்வி ஹரினி அமரசூரிய பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன் புதிய அமைச்சரவையின் பொறுப்புகள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளன.
01. பாதுகாப்பு
03. வலுச்சக்தி
04. கமத்தொழில், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரக வளமூலங்கள்,
ஆகிய அமைச்சுக்கள் சனாதிபதி என்ற வகையில் எனக்குக் கீழும்,
05. நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றம் தொழில்
06. கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்
07. மகளிர், சிறுவர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
08. வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி
09. சுகாதாரம்
ஆகிய அமைச்சுக்கள் கலாநிதி ஹரினி அமரசூரியவின் கீழும்,
10. புத்த சாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடகம்
11. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்
12. பொதுமக்கள் பாதுகாப்பு
13. வெளிநாட்டலுவல்கள்
14. சுற்றாடல், வனசீவராசிகள், வன வளங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டங்கள் மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள்
15.கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை
ஆகிய அமைச்சுக்கள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தின் கீழும் எதிர்வரும் குறுகிய காலத்தில் நிருவகிக்கப்படும்.
இத்தருணத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் நிபுணஆரச்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுனில் ஹந்துன்னெத்தி, பிமல் ரத்நாயக்க, டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, வசந்த சமரசிங்க ஆகிய தோழர்களும் சனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எச். எஸ். துய்யகொன்தா ஆகியோரை உள்ளிட குழுவினரும் இணைந்திருந்தார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours