எஸ்.சபேசன்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கத்திற்கான போட்டியில் சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட றாணமடு இந்து கல்லூரி மாணவர்கள் சாதனை நிலைநாட்டி தங்கப்பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளதாக அதிபர் கதிரைநாதன் தெரிவித்தார்.மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான புத்தாக்கத்திற்கான போட்டியில் தரம் 13 B.TEC இல் கல்வி கற்கும் ஜே.டிபோஷன் தலைமியிலான குழு (production Ind Environment) தங்கப்பதக்கம் வென்று தேசிய மட் டத்திற்கு தெரிவாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் அணிக்கும், வழிப்படுத்திய ஆசிரியர் பிரபாகரன் அவர்கட் கும் பாராட்டுக்களை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours