தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்பது தெளிவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள தமது பிரதிநிதிகள் இது தொடர்பிலான தகவல்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாரியளவு வாக்கு வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றியீட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இடத்தைப் பெறும் வேட்பாளரினால் அநுரவின் வாக்கு எண்ணிக்கையை பிடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரபூர்வமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்ட உடன் அநுரகுமார பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளையில் இன்று மாலையே அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours