( வி.ரி. சகாதேவராஜா)

இலங்கை கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் 67 ஆவது ஆண்டு நிறைவு விழா கொக்கட்டிச்சோலை  கமநல சேவை நிலையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது .


பெரும்பாக உத்தியோகத்தர் கோ. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த  நிகழ்வில் முதியோர் மற்றும் சிறுவர் தின நிகழ்வு இடம் பெற்றது.

 வரவேற்புரையை  கமநல குழுத் தலைவர் ம. கோபாலரெத்தினம் வழங்கினார்.

அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட கமநலஅபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பொறியியலாளர் எஸ். திவாகர் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மாவட்ட கமநலஅபிவிருத்தி அதிகார சபையின் செயலாளர் இ.சுரேஸ்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கொக்கட்டிச்சோலை கமநலஅபிவிருத்தி  சேவை நிலையத்திற்கு உட்பட்ட 25 கமநல அமைப்புகள் சேர்ந்து இதை நடத்தியது.இது ஒரு வார கால நிகழ்ச்சி திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours