( வி.ரி.சகாதேவராஜா)

 தேர்தல் என்றவுடன் இலவசங்களுக்கு குறைவில்லை . ஆனால் அந்த இலவசங்களுக்கு சோரம் போனால் அடுத்த ஐந்து வருடங்களும் சூனியமாகும் .

 இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த்  தெரிவித்தார்.

காரைதீவில் அமைந்துள்ள அம்பாரை ஊடக மையத்தில்  அவரது ஊடக சந்திப்பு இடம் பெற்ற பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் அங்கு மேலும் கூறுகையில் .

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் கோபத்துடன் ஏனைய கட்சிகளை வெறுத்து ஒரு கட்சியை ஆதரித்தார்கள். ஆனால் அந்த கட்சி இன்று  ஏட்டுச் சுரைக்காய் போன்று ஆகிவருகிறது. 

 எதிர்க்கட்சித் தலைவராய் இருந்தும் நாட்டில் சகல மக்களுக்கும் பல அரிய சேவைகளை செய்தவர் சஜித் பிரேமதாசா.அவரை பிரதமர் ஆக்க நாங்கள் அனைவரும் களமிறங்கி உள்ளோம்.
 வடக்கு கிழக்கில் அவர் தான் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். இம்முறையும் அவர்தான் நாட்டிலேயே வெற்றி பெற இருக்கின்றார். அவர்தான் பிரதமராக வருவார் .
அவர் ஆரம்பித்த வீட்டுத் திட்டத்தை பின்னர் வந்த யாருமே முன்னெடுக்கவில்லை. தமிழர் பிரதேசம் எந்த வளமும் இன்றி குடிநீர் வசதியின்றி அல்லல் படுகின்றது .

இன்னும் இனம் மொழி தேசியம் என்று வந்து வாழ்க்கையை பழுதாக்காமல் சஜித்துக்கு வாக்களித்து நாங்கள் முன்னேற வேண்டும்.

இம் முறையும்  தமிழர்களுக்கு சீற் கிடையாது.
ஆனால் நாம் தமிழருக்காக செயற்படுவோம். என்றார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours