( வி.ரி.சகாதேவராஜா)
ரோட்டரிக்
கழக 3220 மாவட்ட ஆளுநர் சுசேன ரணதுங்க கல்முனை றோட்டரிக் கழகத்திற்கு
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் விஜயம் செய்தார்.
இவ் விஜயத்தின்போது ஆளுநருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு பொத்துவில் ஊறணி பேப்பர் மூன் விஸ்கி பொயின்ற் விடுதியில் நடைபெற்றது.
கழகத் தலைவர் ஏஎல்.நாசர் தலைமையில் நடைபெற்ற
இந் நிகழ்வில் கழக செயற்பாடுகளை அறிந்து கொண்டதுடன் புதிய செல்நெறிகள் வழிகாட்டல்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம் பெற்றது.
அவருடன் உதவி ஆளுநர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை
றோட்டரி கழகத்தின் 2024/25 வருடத்திற்கான புதிய தலைவர் பொறியியலாளர்
றொட்டரியன் என். றதீசனின் பதவியேற்பு நிகழ்வும் மாலையில் இடம் பெற்றது
குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours