கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன், ஒரு வருடத்துக்குதான் பணி அனுமதிகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் பணி வழங்குவோர், 

புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.அரசின் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாக இருப்பதுடன், பல தொழில்கள் மூடப்படும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours