எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண் அகழ்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) இடம் பெற்றது.
மண் அகழ்வு மேற்கொள்ளப்படும் பிரதேசத்திற்கு உரிய அதிகாரிகள் குழு விஜயம் மேற்கொண்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்பாட வண்ணம் ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
மாவட்டத்தில் மண் அகழ்வதற்கு அனுமதி வழங்கள் தொடர்பாக
பிரதேச செயலாளர், கிராமசேவையாளர், மற்றும் துறைசார் நிபுணர்கள் குழுவின் மூலம் சிபாரிசுகள் பெற்றதன் பின்பு அகழ்விற்கான அனுமதிகள் வழங்கள் வேண்டும் என இதன் போது கலந்துரையாடப்பட்டது.
மேலும் நீண்ட காலத்திற்கு மண் அகழ்வதற்கான அனுமதி வழங்காது குறுகிய காலத்திற்கு வரையறுத்து அனுமதி வழங்க வேண்டும் என உயர் அதிகார்கள் ஆவணம் செய்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours