( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த
தீமிதிப்பு சடங்கு வைபவத்தில் அரோகரா கோஷம் முழங்க ஆயிரம் தேவதாதிகள்
பக்தி பூர்வமாக தீமிதிப்பிலீடுபட்டனர்.
இத் தீமிதிப்புச்சடங்கு இன்று (3) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
முன்னதாக ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஆலய காணியில் உள்ள கிணற்றில் மஞ்சள் குளித்தனர்.
பின்னர் ஊர்வலமாக வந்து தீமிதிப்பிலீடுபட்டனர்.
சம்மாந்துறை
ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் மற்றும் காரைதீவு பத்திரகாளியம்மன்
ஆலயத்தின் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் முன்னாள் கப்புகனார்
பாஸ்கரன் வழிகாட்டலில் உதவி பூசகர் என்.நிரோஷ் எஸ்.சுதாகர் தலைமையில்
சடங்கு இடம்பெற்றது .
இந்த சடங்கு கடந்த 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
தொடர்ச்சியாக 10 தினங்கள் சடங்கு இடம்பெற்று வந்தது.
நேற்று அன்னதான நிகழ்வும் ஏலமும் இடம்பெற்றன.
இறுதியாக
10ஆம் திகதி வியாழக்கிழமை இரவு எட்டாம் நாள் வைரவர் இடும்பன் திருச்சடங்கு
இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம்
தெரிவிக்கின்றார்.
Post A Comment:
0 comments so far,add yours