மாளிகைக்காடு செய்தியாளர்
 
தனிப்பட்ட சுயநலங்களுக்கு அப்பால் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்துவதன் மூலம் எமது மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்குவோம். ஆகவே பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த எங்களோடு அணி சேருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைத்  தெரிவித்திருந்தார். தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அவர்,

இன்று பெரும்பாலான தாய்மார்கள் நாளை பற்றிய கவலையுடனும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலம்  பற்றிய அச்சத்துடனே வாழ்கின்றனர். அந்நிலைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளின் கல்வியில் மாற்றத்தை கொண்டு வந்து அவர்கள் சுய தொழில் முயற்சியாளர்களாக உருவாகவும் நாங்கள் அயராது அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்றார்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours