மாளிகைக்காடு செய்தியாளர்

இளைஞர்களும் பொதுமக்களும் ஊழலற்ற, மக்களின் நலனை முன்வைக்கும் திறமையான தலைவர்களை விரும்புகின்றனர். இதேபோல, சம்மாந்துறை மக்களும் புதிய மாற்றங்களை விரும்பி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியையும் அதன் வேட்பாளர்களையும் ஆதரிக்க தயாராக உள்ளனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.


அவரது தலைமையில் சம்மாந்துறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

உருவாகப்போகும் பாராளுமன்றத்தில் எம் மாவட்ட மக்களின் சார்பாக குரல்கள் நிச்சயம் ஒலிக்க வேண்டும். இந்த தேர்தலில், சம்மாந்துறை மக்களும், மாவட்ட மக்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து வலுச் சேர்ப்பார்கள் என்றார்.

மேலும், சம்மாந்துறை தொகுதி இழந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஊடாக பெறுவதற்கான விரிவான வியூகம் மற்றும் மாற்றத்தை நோக்கி நகர்வதற்கான முக்கிய கருத்துக்கள் மக்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை உறுப்பினர்கள், அம்பாறை மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் பல ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours