( வி.ரி.சகாதேவராஜா)

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன் போது மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்களான இருதயநாதன் சிறிநாத்
செல்வராஜா தங்கவேல் தருமதாஸ் தங்கவேல் நீதிராஜா தனுகாந் யோசப் யோகராஜினி செல்வத்தம்பி விக்னேஸ்வரன் கணேச பிள்ளை விமலஹாசன் தங்கேஸ்வரன் விஜிதா சக்கரப் பிள்ளை பாலச்சந்திரன் ஆகிய பத்து வேட்பாளர்கள்  வேட்பு மனுவில் ஒப்பமிட்டனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours