எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (08) திகதி இடம் பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலகமும் இணைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்வதற்கு இந் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய சிறுவர்பாதுகாப்பு சபையின் 1998ம் ஆண்டு 50 இலக்க சட்டவரைவு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமுல் படுத்துவதற்று அமைச்சுக்களின் கடப்பாடு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினை ஐந்து வருட திட்டத்தினுல் உள்வாங்குதல் தொடர்பாக தெளிவூபடுத்தப்பட்டது.
சிறார்களுடன் இணைந்து பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள் தொடர்பான தெளிவூட்டல்களை அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் கிராம சேவையாளர் நிர்வாக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாது, மற்றும் உலவள ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் சிறார்களை கண்காணித்து பாதுகாக்க வேண்டியது அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும் என்பதுடன் இச் சேவையை உலப்பூர்டமாக செயற்பட வேண்டும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours