சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு புதன்கிழமை 16 ஆம் திகதி அதிபர் கே.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.அப்பாடசாலையின் பழையமாணவர்கள் மற்றும் உயர்தரமாணவர்களது ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நோக்கில் பல விளையாட்டுக்களும் இடம்பெற்றன
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராசா ஆசிரிய ஆலோசகர் சா.மோகன் அதிதிகளாகக் கலந்துசிறப்பித்ததுடன் ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வி.ரி.சகாதேவராசா அவர்களது சேவையினைப்பாராட்டி நிகழ்வில் பாடசாலை சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours