இலங்கை தமிழரசுக் கட்சிக்கு இம்முறை அம்பாறை மாவட்டத்தில் நிச்சயமாக ஒரு ஆசனம் கிடைக்கும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
பொத்துவில் மணற்சேனை கிராமமக்களுடனான இன்றைய(24)சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ..
அம்பாறை
மாவட்டத்தை இன்று தேசிய பட்டியல் மைதானமாக பயன்படுத்த பலரும் இணைந்து
இருக்கின்றார்கள். 43 சுயேட்சை குழுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. எமது
மக்களின் வாக்குகளை பிரிக்கவாம். அது கனவிலும் நடக்காது.
ஊழலற்ற
அரசியல் தலைவர் நாட்டில் உருவாகி இருக்கின்றார். அந்த அரசோடு பேசி
நியாயமான அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். திருமலையில் இணைந்த தமிழ்
கட்சிகள் ஏன் அம்பாறையில் இணைய முடியாது?
அம்பாறை
மக்களுக்கு உதவி செய்வதாக இருந்தால் மக்களை குழப்ப வேண்டாம். கடந்த
தேர்தலில் 30 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் அன்று அக்கரைப்பற்று ஒருவருக்கு
பாராளுமன்ற ஆசனத்தை வழங்கி இருந்தார் .
அப்பொழுது
இலங்கை தமிழரசுக் கட்சி தேசிய பட்டியல் ஆசனத்தை இங்கு வழங்கியது. ஆனால்
இம்முறை தனக்கே ஆசனம் கேள்விக்குறியாக இருக்கிற ஒரு கட்சியின் தலைவர்
அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியலை வழங்கப் போவதாக பசப்பு வார்த்தைகளை
கூறியிருக்கின்றார். இன்னொருவர் இனி போவதற்கு இலங்கையில் கட்சிகளே இல்லை
என்ற நிலையில் பணத்துக்காக ஆலாய்ப்பறக்கிறார்.
இவர்களெல்லாம் கடந்த காலத்தில் எங்கே போனார்கள்?
கடந்த
காலங்களில் எங்கு சென்றார்கள் இங்கே எத்தனையோ அனர்த்தங்கள் நிகழ்ந்தன
எத்தனையோ உண்ணாவிரதங்கள் நிகழ்ந்தன. எங்கே இந்த தேசிய பட்டியல் தருகின்ற
தலைவர்கள்?
தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல.
Post A Comment:
0 comments so far,add yours