(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது கோட்டத்திற்கு உட்பட்ட பிரதேச பாடசாலைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்
வழங்கலும் மற்றும் சாதனை மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் (22) நடைபெற்றது. 

Sadaqa bulletin welfare Foundation நிறுவனத்தின் அனுசரணையில், ஸதகா புல்லட்டின் மற்றும் பெமிலி ரிலீப் நிறுவனங்களின் பிரதிநிதியும் பொறியியலாளருமான எம்.சி.கமால் நிஷாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.சீ. திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். 

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம்  அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும்  சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.அஸ்மா மலிக் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அதிபர் யூ.எல்.நசார் 
ஆகியோர் நிகழ்வில் விசேட அதிதிகளாகவும் பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபீர், முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீத், கல்முனை வலயக் கல்வி அலுவலக ஆரம்பக்கல்வி வளவாளர் எஸ்.எம்.எம். அன்சார் உட்பட  பிரதேசத்தின் இதர பாடசாலை அதிபர்களான எம்.ஐ.எம்.இல்யாஸ், எம்.எஸ்.எம்.ஆரிப், எம்.ஐ. சம்சுதீன், எம்.எஸ். நபார், எம்.ஐ. நிபாயிஸ், எம்.ஐ.எம்.அஸ்மி மற்றும் கிராம உத்தியோகத்தர் எல். நாஸர் ஆகியோர் விசேட அழைப்பாளர்களாகவும் கலந்து கொண்டு  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை
வழங்கி வைத்தனர்.

பாடசாலையின் பேண்ட் வாத்தியம் முழங்க, சிரேஷ்ட அண்ணாவியார் கலாபூஷணம் ஏ. இஸ்ஸதீன், எம்.எஸ்.எம்.ஸாகிர்  தலைமையிலான பாரம்பரியக் கலையான பாடசாலையின் பொல்லடி மாணவக் குழுவினரின் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டு, அதிதிகள்  வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.

அத்துடன்  அகில இலங்கை ரீதியில் ICT  Scratch Championship 2024 போட்டியில் top 10 வரிசையில் முதலாம் இடம் பெற்ற எம்.எச்.முகமட் ஹசீப் என்ற மாணவனுக்கும் ஏழாம் இடம் பெற்ற எம்.கே. வஃபா அஹமட் என்ற மாணவனுக்கும்  சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.

இவற்றை sadaqa bulletin welfare Foundation வழங்கி வைத்தது. 

இந்த சிறப்பான சேவையை மிகத் தத்ரூபமாகச் செய்து வருகின்ற பொறியியலாளர் எம்.சி. கமால் நிஷாத்துக்கு நிகழ்வில் கலந்து கொண்ட  பிரதம அதிதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.சீ. திசாநாயக்க உட்பட அதிதிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் குழாத்தினால் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டார். 

இந்நிகழ்வுக்கு அறிவிப்பாளர்களாக தமிழ் மொழிக்கு இர்ஷாத் ஆசிரியரும் ஆங்கில மொழிக்காக கபூர் (உதவி அதிபர்) அவர்களும்  கடமையாற்றினர்.

நிகழ்வில், பிரதி உதவி  அதிபர்களும் ஆசிரிய ஆசிரியைகள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் நலன் விரும்பிகள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு இப்பாடசாலையின் பிரதி அதிபர் றிப்கா அன்சாரினால் நெறிப்படுத்தி  ஒழுங்கமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours