சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக் கோட்டத்தில் அமைந்துள்ள நாமகள் வித்தியாலயத்தில்; ஆசிரியர் தின நிகழ்வு பெற்றோர்களது ஒத்துழைப்புடன்  24 ஆம்திகதி வியாழக்கிழமை  அதிபர்  இ.தவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது ஆசிரியர்கள், மற்றும் அதிதிகள் மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பூமாலை சூடி வரவழைக்கப்பட்டதுடன் ஆசிரியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்குப் போட்டி நிகழ்வுகள் நடாத்தப்பட்டதுடன் மாணவர்களது கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன

இந்நிகழ்வில் அப்பாடசாலையின் முன்னாள் அதிபர்களான ஓய்வுபெற்ற மு.இராஜகோபால் ,சா.நடனசபேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours