மட்டக்களப்பு வாகனேரி பிரதேசத்தில் இன்று (26) திகதி அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை வீழ்ச்சியாக 139.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது.
இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான உன்னிச்சையில் 98.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமத்தில் 120.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், பாசிக்குடாவில் 74.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், இதுதவிர குறைந்த மழைவீழ்ச்சியாக கட்டு முறிவில் 28.0 மில்லி மீற்றர் மழைவிழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours