அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பின் நிருவாக சபைக் கூட்டம் 03.11.2024 ஞாயிறு சேனைக்குடியிருப்பு ADVRO நிலையத்தில் தலைவர் திரு. கா.சந்திரலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இதன்போது நடைபெற்று முடிந்த தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் போது ஆசிரியர்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் பாடசாலைகள் பெறக்கூடிய பெறுபேறுகள் பற்றிய ஆசிரியர்களது எதிர்வு கூறல்கள் இடம்பெற்றதுடன்
புதிய ஆண்டுக்கான வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி ஆசிரியர்கள் விபரம் மற்றும் ஒப்பந்தங்கள் பற்றிய கருத்துக்கள்.அத்தோடு இவ்வாண்டில் ADVRO SL அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் கணவரதராஜன் பொருளாளர் வித்தியானந்தன் பிரதித்தலைவர் ஓய்வுநிலை பொறியியலாளர் த.சர்வானந்தன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
Post A Comment:
0 comments so far,add yours