எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன் மேற்பார்வையின் கீழ் "சித்துவிலி சித்தம் " சித்திரப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கௌரவம் வை எம் சி ஏ மண்டபத்தில் இன்று (08) வழங்கப்பட்டது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் அகில இலங்கை ரிதியில் பதாதை, சித்திரம், மற்றும் கார்டுன் போட்டிகளில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை தொணிப்பொருளாகக் கொண்டு தேசிய சிறூவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் நான்காவது தடவையாக சித்துவிலி சித்தம் 2024 சித்திரப்போட்டி நடைபெற்றது.
மாவட்ட மட்டத்தில் முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் வெற்றியிட்டியவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம், மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் பிரபாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்களான திருமதி நிஷா ரியாஸ், த .பிரபாகர் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours