மாளிகைக்காடு செய்தியாளர்
புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் செயற்பாட்டு காரியாலயம் செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி (பொலிஸ் வீதியில்) சம்மாந்துறை மக்களின் முன்னிலையில் ஐ.தே.கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் முஹம்மட் பாசித் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்திற்கும், அம்பாறை மாவட்டத்திற்கும், சம்மாந்துறை மண்ணுக்கும் சகோதரர் ஏ.எம். ஜெமீல் செய்த நிறைய சேவைகள் பற்றி நன்றியுடன் நினைவு கூர்ந்த சம்மாந்துறை மக்கள் தமது ஆதரவை அணி திரண்டு வெளியிட்டதுடன் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னம், மூன்றாம் இலக்க வேட்பாளர் ஏ.எம். ஜெமீல் அவர்களுடைய கரத்தினை பலப்படுத்தி ஜெமீல் அவர்களின் வெற்றிக்காக முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணி செய்ய முன்வந்துள்ளார்கள்.
இந்த தேர்தல் செயற்பாட்டு காரியாலய திறப்பு விழாவில் ஸ்ரீ லங்கா ஜனநாயக கட்சியின் தலைவரும், தேசியப்பட்டியல் வேட்பாளருமான கலாநிதி அன்வர் எம் முஸ்தபா, அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் நூருல் ஹுதா உமர், ஐ.தே.கட்சி சம்மாந்துறை அமைப்பாளர் பொறியியலாளர் பர்சாத் கான், சிரேஷ்ட அறிவிப்பாளர் ரோஷன் அஸ்ரப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours