(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தில் 03ஆம் இலக்கத்தில் போட்டியிடும் திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனைப் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபை ஆதரித்து ஒலுவில் மண்ணில் ஏற்பாடு செய்த மாபெரும் பெண்கள் எழுச்சி மாநாடு (9) இன்று சனிக்கிழமை ஏ.பி.எம்.ராபி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விசேட உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அமானுல்லா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், போராளிகள், பெண்கள், இளைஞர்கள் என பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours