எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

வடகிழ் பருவ பெயர்ச்சி மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தாழ்நில பிரதேசங்களுக்கான போக்கு வரத்திற்கான படகு சேவைகள் இன்று (26) திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் தொடர்ச்சியான மழையுடனான காலநிலை காணப்படுவதனால் தாழ்நில பிரதேசங்களுக்கான போக்குவரத்துக்கள் முற்றாக துண்டிக்கப்பட்டுதனால் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் இப்பிரதேசங்களுக்கான படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்த கல், ஏறாவூர் பற்று ஈரழக்குளம், மயில வெட்டுவான் மற்றும் போதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வேற்றுச்சேனை, கோறளைப்பற்று வாழைச்சேனை நாசீவன்தீவு போன்ற பிரிவுகளுக்கான  படகுகள் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை மாவட்டத்தில்  161 குடும்பங்களைச் சேர்ந்த 522 நபர்கள் உறவினர் நண்பர்கள் விடுளுக்கு தஞ்சம் புகுத்துள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.சியாத் தெரிவித்துள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours