( வி.ரி. சகாதேவராஜா)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின்  பரிசளிப்பு விழாவானது நேற்று முன்தினம் அதிபர் ஜே.ஆர்.டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஒலுவில் தென்கிழக்கு பல்கலைகழக பிரதி பதிவாளர் சஞ்சீவி சிவகுமார், விசேட அதிதியாகவும், திருக்கோவில் கல்வி வலயத்தின் கல்வி நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளருமான கீ.கமலமோகனதாசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கி கெளரவித்திருந்தனர்.

 இந் நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்களான கே.ஜயந்தன், ஆர்.சதீஸ், சி..மதியழகன் ஆகியவர்களின் வழிகாட்டலிலும், பாடசாலை நூலக அபிவிருத்தி குழு  பிரதி அதிபருமான எஸ்.மகேஸ்வரனின் ஒருங்கிணைப்பிலும்.
 பாடசாலை நூலக குழு உறுப்பினர்களான ஆசிரியர் ரி .கிரிசன், ஆசிரியை சப்னாபானு, நூலக உதவியாளர்களான எஸ்.சிறிகாந்தன், எம். றமீன், திருமதி.கே.கிரிஜாழினி மற்றும் மாணவர்களான எம். ஜயதேவ், சாருன், ஹம்ஷாளினி, ரட்ஷனா, மஹாசினி , சப்தவி ஆகியோரின் பங்களிப்புடன் திறன்பட இடம்பெற்றது. 

இந் நிகழ்வில் தேசிய வாசிப்பு தொடர்பாக  ஒக்டோபர் மாதம் இடம்பெற்றிருந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும், மற்றும் நினைவு சின்னங்களும் வருகை தந்திருந்த அதிதிகளினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர். 

மேலும் பாடசாலையின் நூலக அபிவிருத்தி குழுவின் திட்டத்தினால் இவ் வருடம் ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட   பாடசாலைகளின் கட்டாயத் தேவையுடைய இரு மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours