இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்ட சின்னமுத்து நோய் மீண்டும் இலங்கையில் பரவலாக பரவி வருவதை கண்டறியப்பட்டதன் காரணமாக இந்த நோயை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சினால் விசேட வாரமாக நவம்பர் 9 ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு 20 வயது தொடக்கம் 30 வயது வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர் . முரலிஸ்வரன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில் சின்னமுத்து தடுப்பூசி ஏற்றும் விசேட நிகழ்வு இன்று மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது .
தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு , சுகாதார மேம்பாட்டு பணியகம் ,உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சின்னமுத்து நோய் தடுப்பு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தொற்றுநோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் நிமால் சாந்த கமே கெதர, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் , கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எந்திரி என். சிவலிங்கம் , மட்டக்களப்பு பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு தொற்று நோய் வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.கார்த்திகா மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் ,பிரதேச பிரதி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பிரசாந்தி லதாகரன் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரிகள் ,தாதிய உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours