வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் உள்ள கையிருப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர்  தெரிவித்துள்ளார்.

அத்தோடு, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது நிதிக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் 2025 பெப்ரவரிக்குள் தளர்த்தப்படும் என முன்னைய அரசாங்கம் அறிவித்திருந்தது. புதிய அரசாங்கம் அதன்படி செயற்பட்டால், ஐ.எம்.எப் பரிந்துரைகளுக்கு இணங்குமா? என  பீட்டர் ப்ரூவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours