இ.சுதாகரன்
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் ஒளிவிழா நிகழ்வானது வித்தியாலயத்தின் முதல்வர் உதயகுமார் கோகுலராஜ் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.நிகழ்வில் பிரதம அதிதியாக பட்டிருப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களும் .பிரதி அதிபர் எம்.மேவின்இ பெரியகல்லாறு கிறிஸ்தவ திருச்சபைகளின் போதகர்கள் மற்றும் அண்மைப் பாடசாலைகளின் அதிபர்கள்இஆசிரியர்கள்இமாணவர்கள்இ பெற்றோர்கள்இ பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடப்பெற்றதுடன் வலய மட்டப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பிரதம அதிதியினால் பதக்கம் அணிவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதியாக நிகழ்வில் கலந்து சிறப்பித்த பட்டிருப்பு வலயக் கல்விப்பணிப்பாளர்
திரு.சி.சிறிதரன் அவர்கள் பாடசாலை நிருவாகத்தினால் பொன்னாடை அணிவித்துஇ வாழ்த்துப்பா வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours